ETV Bharat / state

'வாஜ்பாய் பெயரை மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சூட்ட வேண்டும்' - எல். முருகன் - வாஜ்பாய் பெயரை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சூட்ட வேண்டும்

சென்னை: சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயின் பெயரைச் சூட்ட வேண்டுமென பாஜக மாநில தலைவர் எல். முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாஜ்பாய் பெயரை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சூட்ட வேண்டும்! - பாஜக முருகன் கோரிக்கை

author img

By

Published : Aug 1, 2020, 3:41 AM IST

இது தொடர்பாக அவர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் மத்திய அரசு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. சென்னையில் முக்கியப் பகுதிகள் அனைத்தும் இன்று மெட்ரோ ரயில் சேவையில் இணைக்கப்பட்டு, மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

சென்னையில் ஆலந்தூர், சென்ட்ரல், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா என பெயர்கள் சூட்டவிருப்பதாக தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளதை தமிழ்நாடு பாஜக வரவேற்கிறது.

அந்த வகையில், சென்னை பாரிமுனை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தை வகுத்துதந்த மாமேதை டாக்டர் அம்பேத்கர் பெயரையும், அதேபோன்று சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரையும் சூட்ட வேண்டுமென கோரிக்கை விடுகிறோம்.

இந்தியாவின் போக்குவரத்து, நவீன தொழில் நுட்பம், கல்வித் துறை, பாதுகாப்புத் துறை, விவசாயத் துறை என பல்வேறு துறைகளில் வியக்கத்தகு முன்னேற்றங்களைக் கொண்டுவந்த வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் அவருடைய முழு முயற்சியால் இந்தியாவில் முதன் முதலாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைப் போற்றும்வகையில் அவரது பெயரை சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சூட்ட வேண்டும்.

மேலும், சென்னை முழுவதுமுள்ள இதர மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு, தியாகங்கள் புரிந்த தமிழ்நாட்டு தலைவர்களின் பெயர்களையும் சூட்ட வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.