ETV Bharat / state

'சிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி': வைரமுத்து ட்வீட்!

author img

By

Published : Sep 20, 2019, 6:22 PM IST

கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பாக பாடலாசிரியர் வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

vairamuthu

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்திய தொல்லியல்துறை சார்பில் மூன்றுகட்ட அகழாய்வு பணிகள் செய்யப்பட்டன. இதில் சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை விளக்கும் விதமாக மணிகள், தந்தத்திலான பொருட்கள், பண்டைய தமிழர்களின் கட்டட அமைப்புகள் கிடைக்கப்பெற்றன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் நான்காம் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் தங்கத்திலான அணிகலன்கள், பவள மணிகள் எனப் பல பொருட்கள் கிடைக்கப்பெற்றன.

இதையடுத்து ஜூன் 13ஆம் தேதி கீழடியில் தமிழ் வளர்ச்சி, தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்த பணிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை காப்பாட்சியர் பிரபாகரன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகள் தொடங்கப்பட்ட ஒருவார காலமே ஆன நிலையில் அங்குள்ள நான்கு அகழாய்வு குழிகளில் ஆய்வுப்பணியின்போது ஏராளமான பண்டைய கால ஓடுகளும், பானைகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. பின்னர் ’விரைவில் ஆறாம் கட்ட அகழாய்வு நடத்தப்படும்’ என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து கீழடி அகழாய்வு தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ’சிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி. மேலும் ஊடகங்களின் ஒளி வேண்டும், மத்திய அரசின் துணை வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

வைரமுத்து ட்வீட்
வைரமுத்து ட்வீட்

இது தொடர்பாக படிக்க: கீழடியில் விரைவில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி - அமைச்சர் கே.பாண்டியராஜன்

Intro:Body:

சிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி. மேலும் ஊடகங்களின் ஒளி வேண்டும்; மத்திய அரசின் துணை வேண்டும். #Keezhadi #கீழடி

https://twitter.com/vairamuthu/status/1174938471804203010

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.