ETV Bharat / state

வைகோ மீதான தேச துரோக வழக்கு: விரைவில் தீர்ப்பு! - புத்தகம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேச துரோக வழக்கின் தீர்ப்பு ஜூலை 5ஆம் தேதி வழங்கப்படும் என எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

vaiko
author img

By

Published : Jun 19, 2019, 7:41 PM IST

2009ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவரது பேச்சு இந்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததாக, வைகோ மீது தேச துரோக வழக்கு, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கின் விசாரணைக்கு வைகோ நேரில் ஆஜராகி வந்தார்.

அப்போது குற்றச்சாட்டு பதிவு, அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பது சாட்சிகளிடம் சாட்சி விசாரணை, சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம், குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள் என நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 5ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Intro:nullBody:மதிமுக பொது செயலாளர் வைகோ மீது போடப்பட்டுள்ள தேச துரோக வழக்கின் மீதான தீர்ப்பு ஜூலை 5ஆம் தேதி வழங்கப்படும் என எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ராணி சீதை மன்றத்தில் 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் பேச்சு இந்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததாக, வைகோ மீது தேச துரோக வழக்கு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தினர் தேச துரோக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் ஒவ்வொரு விசாரணைக்கும் வைகோ நேரில் ஆஜராகி வருகிறார்.

குற்றச்சாட்டு பதிவு, அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 9 சாட்சிகளிடம் சாட்சி விசாரணை, சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம், குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள், எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தல் என அனைத்து விசாரணை நடைமுறைகளும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஜூலை 5ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.