தூத்துக்குடி: நடிகர் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். பேட்டரி கார் மூலம் கோயிலுக்கு வந்த அவர், மூலவர் சண்முகர் சத்ரு சம்ஹார மூர்த்தி பெருமாள் ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து, வழிபாடு நடத்தினார். இதனையடுத்து தரிசனம் முடிந்து, வெளியே வந்த சிவகார்த்திகேயனை சூழ்ந்து ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார். அபோது பேசியதாவது, “மழை வெள்ளம் எச்சரிக்கை இருந்ததால் தாமதமாக கோயிலுக்கு வந்துள்ளேன். ஒரே நாளில் அறுபடை வீடுகளில் உள்ள முருகனை தரிசனம் செய்ய நீண்ட நாள் ஆசை. முதலில் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்துவிட்டு, அடுத்தடுத்து மற்ற கோயிலுக்கு செல்ல உள்ளேன்.
எப்போது திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்தாலும் பாசிட்டிவாக இருக்கும், அமரன் வெற்றிக்கு நன்றி தெரிவிப்பது முக்கிய கடமையாக உள்ளது. மேலும் பல வேண்டுதல்களை வைத்துள்ளேன். கோயிலுக்கு வந்தது மிகவும் திருப்தியாக இருந்தது. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், இந்த ஆண்டு சிறப்பாக அமையட்டும். இந்தக் கூட்டத்திலும் சிறப்பான தரிசனம் ஏற்பாடு செய்ததற்கு கோயில் நிர்வாகத்திற்கும், அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்
இதனையடுத்து தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”இதைப் பற்றி கோயிலில் பேச வேண்டாம், வேறு இடத்தில் பேசிக் கொள்ளலாம். இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதுதான் எல்லோருடைய நினைப்பும், காவல்துறை நடவடிக்கையும் சரியாக உள்ளது. இருந்தாலும் நாம் பாதிக்கப்பட்ட பெண் பக்கத்தில் தான் நிற்க வேண்டும் என நினைக்கிறேன். பெண்களுக்கு தைரியம் வேண்டும். இது போன்ற சம்பவம் இனி நடக்கக் கூடாது என கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்” என கூறினார்.
இதையும் படிங்க: 8 பேக் வைத்த விஷால், படப்பிடிப்பில் நடந்த பயங்கர விபத்து... ’மதகஜராஜா’ குறித்து பேசிய சுந்தர்.சி! - SUNDAR C ABOUT VISHAL
நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் கடைசியாக வெளியான ’அமரன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து முருகதாஸ் இயக்கும் ’SK23’, சுதா கொங்குரா இயக்கத்தில் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோருடன் ஒரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.