ETV Bharat / state

தமிழர்களை வஞ்சிக்கும் இந்திய அரசாங்கம்; வைகோ, திருமுருகன் காந்தி பேட்டி

author img

By

Published : May 18, 2019, 9:31 AM IST

சென்னை: ஈழத்தமிழர்களுக்கான 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் வைகோவும், திருமுருகன் காந்தியும் பேட்டியளித்துள்ளனர்.

vaiko and thirumurugan

மதிமுக சார்பில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் ஈழ தமிழர்களுக்கு 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைப்பெற்றது. இதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் கலந்துகொண்டார். மேலும் மதிமுக முக்கிய நிர்வாகிகள், துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.நினைவேந்தல் நிகழ்ச்சியில் போரில் மறைந்த ஈழ தமிழர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி தீபம் ஏற்றியும், மலர் தூவியும் போற்றினர்.

வைகோ, திருமுருகன் காந்தி பேட்டி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ”தமிழின மக்களுக்கான நீதி இன்றுவரை தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது. இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை தற்போதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. தமிழின மக்களுக்கு அரசியல் கோரிக்கையை நடைமுறைப்படுத்துகின்ற வகையில் பொது வாக்கெடுப்பும் இன்றுவரை நடத்தப்படவில்லை. இந்த சூழ்நிலையில் இலங்கை அரசை பாதுகாக்கும் வகையில் சர்வதேச நாடுகள் பல ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்திவருகின்றன. இந்திய அரசு உதவியில் சர்வதேச விசாரணை என்னும் பிடிப்பில் இருந்து தப்பிவிட முடிகிற அரசை பாதுகாக்கின்ற வகையில் ஒரு வெளியுறவு கொள்கையை இந்திய அரசு வைத்திருக்கும்வரை தமிழ் மக்களுக்கு நீதி எனும் ஒன்று கிடைக்காது என கூறினார்.

இதன் தொடர்ச்சியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், ”இலங்கையில் நடைப்பெற்றது போர் குற்றம் அல்ல அது ஒரு இனப்படுகொலை ஆகும். இந்திய மோடி அரசு ஐந்தாண்டில் சிங்கள அரசுக்கு தொடர்ச்சியாக உதவிவருகிறது. தமிழர்களுக்கும், மீனவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை, ஈழ தமிழர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. பொது வாக்கு எடுப்பதுதான் ஒரு நிரந்தர தீர்வு ஆகும், இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்திய அரசு வேண்டுமென்றே விடுதலைப் புலிகள் மேல் ஐந்தாண்டுகள் தடையை நீட்டித்துள்ளது. முன்னர் நான் தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தால் நான் மீண்டும் வாதாடுவேன் என கூறினார்

மதிமுக சார்பில் அக் கட்சி தலைமை அலுவலகத்தில் ஈழத்தமிழர்களுக்கு 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைப்பெற்றது. இதில் மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் கலந்துக்கொண்டார். மேலும் மதிமுக முக்கிய நிர்வாகிகள் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தயா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

நினைவேந்தல் நிகழ்ச்சியில் போரில் மறைந்த ஈழத்தமிழர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி தீபம் ஏற்றியும், மலர் தூவியும் போற்றினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், தமிழின மக்களுக்கான நீதி இன்று வரை தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது. இனப்படுகொலைக்கான சர்வதேச சுதந்திரமான விசாரணை தற்போது வரை நடைமுறை படுத்தவில்லை. தமிழின மக்களுக்கு அரசியல் கோரிக்கையை நடைமுறை படுத்துகின்ற வகையில் பொது வாக்கெடுப்பும் இன்றும் நடத்தப்படவில்லை. 

இந்த சூழ்நிலையில் இலங்கை அரசை பாதுகாக்கின்றன வகையில் சர்வதேச நாடுகள் பல ஒப்பந்தகளை நடைமுறை படுத்தி வருகின்றனர். 

இந்திய அரசு உதவில்லாமல் சர்வதேச விசாரணை என்னும் பிடிப்பில் இருந்து தப்பிவிட முடியஅரசை பாதுகாக்கின்ற வகையில் ஒரு வெளியுறவு கொள்கையை இந்திய அரசு வைத்திருக்கும் வரை தமிழக மக்களுக்கு நீதி எனும் ஒன்று கிடைக்காது என கூறினார்.  

தொடர்ச்சியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், இலங்கையில் நடைப்பெற்றது போர் குற்றம் அல்ல அது ஒரு இனப்படுகொலை ஆகும். இந்திய மோடி அரசு ஐந்தாண்டில் சிங்கள அரசுக்கு தொடர்ச்சியாக உதவி வந்தது. தமிழர்கள் மீனவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை, ஈழத்தமிழர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. பொது வாக்கு எடுப்பதுதான் ஒரு நிரந்தர தீர்வு ஆகும் இதற்கு எந்த மாற்றமும் இல்லை. 

இந்திய அரசு வேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் மேல் தடையை இன்னும் ஐந்தாண்டுகள் நீட்டித்துள்ளது. முன்னர் நான் தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரீட் மனு இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தால் நான் மீண்டும் வாதாடுவேன் என கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.