ETV Bharat / state

மாணவர்கள் - ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்: பல்கலைக்கழக மானிய குழுவுக்கு உத்தரவு - பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவு

சென்னை: உயர் கல்வி வழங்கும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளித்து கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஒன்றிய - மாநில அரசு,பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
MHC
author img

By

Published : Jul 6, 2021, 3:09 PM IST

கரோனா தொற்று பரவல் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதால் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதால், உயர் கல்வி பெறும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளித்து கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி, வகுப்புகளை மீண்டும் தொடங்க உத்தரவிடக் கோரி, நேர்வழி இயக்கம் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ”நாட்டில், 23.8 விழுக்காடு வீடுகளில் மட்டுமே இணையதள இணைப்புகள் உள்ளன. 10.7 விழுக்காடு வீடுகளில் மட்டும் கணிணி வசதிகள் உள்ளன. 130 கோடி மக்கள் தொகையில், 30 கோடி மக்களிடம் மட்டுமே ஸ்மார்ட்போன்கள் உள்ளதாக 2017ல் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதனால் அனைத்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும் வசதியை பெற்றிருக்கவில்லை. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, பொறியியல், சட்டம், மருத்துவம், கட்டட கலை படிப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர் ஊரடங்கு காரணமாக, பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு முரணாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதனால், உயர்கல்வி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான கொள்கையை அமல்படுத்தி, அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளித்து கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். வகுப்புகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டப்பட்டிருந்தது.

இந்த மனுவானது தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜூலை 14ஆம் தேதிக்குள் பதிலளிக்க ஒன்றிய - மாநில அரசுகளுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் வெற்றி: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.