தேஹ்ரடுன்: பவர் பேங்க் செயலி பயன்பாட்டின் மூலம் சர்வதேச அளவில் 350 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதனையடுத்து, உத்தரகாண்ட் எஸ்.டி.எஃப், சைபர் கிரைம் காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.
சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
இந்த வரிசையில், உத்தரகாண்ட் எஸ்.டி.எஃப் அலுவலர்கள் தமிழ்நாடு சேலம், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த இருவரையும் கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
இந்த பணம் மோசடியில் பல சைபர் கிரைம் குற்றவாளிகள் கைதான நிலையில், சீனா, ஹாங்காங், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பல மாநிலங்களில் இயங்கும் நெட்வொர்க் குறித்த தகவல்கள் வெளிவந்தன.
டெல்லி, கர்நாடகா, தற்போது தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சோதனைகளை நடத்தி குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பவர் பேங்க் செயலி
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள இந்த பவர் பேங்க் பயன்பாட்டில் பணத்தை முதலீடு செய்தால் 15 நாள்களில் பணம் இரட்டிப்பாக்குவதாக கூறியதையடுத்து பொதுமக்கள் இதனை நம்பி பயன்படுத்த தொடங்கினர்.
ஆரம்ப கட்டத்தில், இது சிலருக்கு இரு மடங்கு பணத்தை கொடுத்தது. பின்னர், பெரிய தொகையை டெபாசிட் செய்தவுடன் பணம் திருப்பி கொடுக்கப்படவில்லை.
இந்தப் பயன்பாட்டின் மூலம் சுமார் 350 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக உத்தரகாண்ட் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சீட்டு நடத்தி பணம் மோசடி செய்த பெண் - புகார்