ETV Bharat / state

சென்னையில் புதிதாக 140 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியம் - Ma Subramaniam

சென்னையில் 140 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் புதிதாக 140  நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்  - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

author img

By

Published : May 14, 2022, 6:34 AM IST

சென்னை: மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் பிரியா,துணை மேயர் மகேஷ் குமார்,மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் , "சென்னையில் மார்க்கெட், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மற்றும் பேருந்து நிலையம் என மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் தலா 35.45 லட்சம் மதிப்பில் மிக விரைவில் அமைக்கப்பட உள்ளது.

சென்னையில் 140 இடங்கள் தற்போது வரை தேர்வு செய்து முடிக்கப்பட்டு உள்ளது. பிற இடங்கள் விரைவில் தேர்வு செய்யப்படும். மேலும் சென்னை மாநகராட்சியில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த 588 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அம்மா மினி கிளினிக் என்பதை ஒராண்டுக்கு மட்டுமே ஏற்படுத்தினர். ஒரே மருத்துவருடன் அது செயல்பட்டது. அம்மா மினி கிளினிக்கில் வெறும் தோற்றம் மட்டுமே . அது பெயருக்கு ஏற்படுத்தப்பட்டது. இது ஊருக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் அமைய உள்ள இந்த நகர்ப்புற மருத்துவ நிலையங்களில் அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றியவர்கள் பேரிடர் காலங்களில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணிகள் வழங்கப்பட உள்ளது.

காய்ச்சல் சளி போன்ற சாதாரண நோய்களுக்கு பெரிய மருத்துவமனைகளில் மக்கள் இனி காத்திருக்க தேவையில்லை.
மாநகராட்சியின் சார்பில் தற்போது 169 மருத்துவமனைகள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் மருத்துவத்தின் தலைநகராக சென்னை விளங்கி வருகிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: குன்னூரில் ஹெலிகாப்டர் ஒத்திகை..!- துணை ஜனாதிபதி பயணத்தையொட்டி நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.