ETV Bharat / state

போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் காணொலிகள் பதிவேற்றம் - டிக் டாக் மீது புகார் - tobacco products

சென்னை: போதைப் பொருட்களை உக்கவிக்கும் விதமாக அதிக அளவில் காணொலிகள் பதிவேற்றம் செய்யப்படுவதாக டிக் டாக் செயலி மீது புகார் எழுந்துள்ளது.

tik-tok
author img

By

Published : Sep 12, 2019, 8:36 AM IST

இன்றைய இணைய கலாச்சாரம் சமூகத்தில் நன்மை-தீமை இரண்டையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில், ஆபாச காணொலிகளுக்கு வரைமுறை சரியாக இல்லையென்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை டிக் டாக் செயலிக்கு தடைவிதித்தது. தொடர்ந்து டிக் டாக் தரப்பு வாதங்களை கேட்ட பிறகு ஒரே வாரத்தில் உயர் நீதிமன்றம், ஆபாச காணொலிகள் குழந்தைகளை பாதிக்கும் என்று தடைவிதித்ததாகவும், இது போன்ற சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் பதிவேற்றம் செய்யக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை டிக் டாக் மீது விதித்திருந்தத் தடையை நீக்கியது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த விவகாரம் எழுப்பப்பட்ட போது அப்போதைய தொழில்நுட்பத் துறை அமைச்சர் கண்டிப்பாக டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் டிக் டாக் செயலி சர்ச்சையில் சிக்கியுள்ளது. டிக் டாக் செயலியில் இளைஞர்கள் பலர் போதைப் பொருட்கள் பயன்படுத்துவது போன்று அதிக அளவில் காணொலிகளை பதிவேற்றம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

tik-tok
போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் காணொலிகள் பதிவேற்றம்

இது போன்ற காணொலிகளை இளைய தலைமுறையினர் அதிக அளவில் பகிர்வதாகவும், லைக்குகள், கமெண்ட்டுகள் மூலம் ஊக்குவிப்பதால் கலாச்சார சீரழிவு ஏற்பட்டு போதைப்பொருள் பயன்பாட்டை தொடர வழிவகை செய்வதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இத்தகைய செயல்கள் புகையிலைப் பொருட்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ விளம்பரம் செய்யும் (COPTA பிரிவு 5) சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது எனவும் டிக் டாக் செயலி மூலம் போதை பொருட்களை விளம்பரப் படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க டிக் டாக் நிறுவனத்திற்கு புகையிலை கண்காணிப்புக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Intro:Body:மீண்டும் சர்ச்சையில் டிக் டாக் - போதைப்பொருட்களை உக்கவிக்கும்விதமாக அதிக அளவு விடியோக்கள் பதிவேற்றம்.

போதை பொருட்களை உட்கொள்ளுவது போல் இளைஞர்கள் அதிக அளவு டிக் டாக் செயலியில் வீடியோக்கள் பதிவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை உடனே கண்காணித்து அதுபோன்று விடியோக்கள் பதிவேர்க்கம் செய்யாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஆபாச வீடியோக்களுக்கு வரைமுறை சரியாக இல்லையென்று மதுரைகிளை உய்ரநீதிமன்றம் டிக் டாக் வளைத்தளத்திற்கு தடைவிதித்தது. பிறகு டிக் டாக் தரப்பு வாதங்களை கேட்ட பிறகு ஒரே வாரத்தில் உயர்நிதிமன்றம் ஆபாச வீடியோக்கள் குழந்தைகளை பாதிக்கும் என்று தடைவிதித்தோம். ஆபாச விடியோக்கள் மற்றும் சமூக சீர்கேடு வீடியோக்கள் பதிவேர்க்கம் செய்யக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன் மதுரை உயர்நிதிமன்ற கிளை டிக் டாக் மேல் போடப்பட்ட தடையை நீக்கியது. இதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் இந்த விவகாரம் எழுப்பப்பட்ட போது அப்போதைய தொழில்நுட்ப துறை அமைச்சர் கண்டிப்பாக டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் மீண்டும் தற்போது டிக் டாக் செயலி சர்ச்சையில் சிக்கியுள்ளது. டிக் டாக் செயலியில் இளைஞர்கள் பலர் போதை பொருட்கள் பயன்படுத்துவது போன்று அதிக அளவு விடியோக்கள் பதிவேற்றும் செய்து வருகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கு அதிக அளவு லைக்குகள், கமெண்ட்டுகள் வருவதால் இளைஞர்களை இது போல் செயலலில் தொடர்ந்து ஈடுபட வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்துதெரிவிக்கின்றனர். இது போல் செயல்கள் பிரிவு 5 COPTA சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது எனவும் டிக் டாக் செயலியால் போதை பொருட்கள் விளம்பரம் படுத்தும் வண்ணம் உள்ளதாகவும் இதனை உடனடியாக தடுக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கும் மாரு டிக் டாக் செயலியிடம் புகையிலை கண்காணிப்பு என்னும் குழு கேட்டுக்கொண்டுள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.