சென்னை ஆதம்பாக்கம் லாயிட்ஸ் அவென்யூ 1ஆவது தெருவில் வசித்து வருபவர் தர்மலிங்கம்(53). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியை வேளச்சேரியில் உள்ள மருத்துவமைக்கு அழைத்துசென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து வீட்டிற்குள் சென்ற அவர் ஒரு லேப்டாப், வெள்ளி செயின், இரண்டாயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை திருடு போயிருப்பதைக் கண்டார். தொடர்ந்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் கொள்ளைபோன வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாததால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையர்கள் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள்!