சென்னை: குரோம்பேட்டை ரயில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக தாம்பரம் இருப்புப்பாதை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அப்போது தலை நசுங்கிய நிலையில் உடல் சிதைந்து 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருந்தது தெரியவந்தது. பின்னர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தாம்பரம் இருப்புப்பாதை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 100 நாள் வேலைத்திட்டத்தால் விவசாயம் பாதிப்பு - விவசாயிகள் வேதனை