சென்னை பெருங்குடி தொழிற்பேட்டை அருகே உள்ள கால்வாயில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் இருப்பதாக, துரைப்பாக்கம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: நகைக்கடையில் நூதன திருட்டு: இரண்டு பெண்கள் கைது!