ETV Bharat / state

'உலகத் தமிழ் கலைஞர் மாநாடு' டீசர் வெளியீட்டு விழா

சென்னை: இலங்கையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ் கலைஞர்கள் மாநாட்டிற்கான 'டீசர்' வெளியீட்டு விழா சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

ulaga,thamizh,kalaingnar
author img

By

Published : Aug 26, 2019, 11:37 AM IST

அகில உலக கலைஞர் சங்கம் சார்பாக 'உலகத் தமிழ் கலைஞர் மாநாடு' வரும் 2020ஆம் ஆண்டு இலங்கை, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்க்கான 'டீசர்' வெளியீட்டு விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கு ஒன்றில் நேற்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இராஜமாணிக்கம், சீர்காழி சிவசிதம்பரம், திரைப்பட பாடலாசிரியர் கபிலன், நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய சங்க நிர்வாகிகள், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் மாநாட்டு தேதி அறிவிக்கப்படுமெனவும், மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் 10,000 கலைஞர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

'உலகத் தமிழ் கலைஞர் மாநாடு' டீசர் வெளியீட்டு விழா

நாட்டுப்புறக் கலைஞர்கள், கலைத்துறையில் சாதித்தவர்கள், எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் மூன்று நாள் நிகழ்வில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும். மேலும் சிறுவர்களுக்கும், மாணவர்களுக்கும் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Intro:உலகத் தமிழ் கலைஞர் மாநாடு குறித்த டீசர் வெளியீட்டு விழாBody:அகில உலக கலைஞர் சங்கம் சார்பாக வரும் 2020ம் ஆண்டில் இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் நடைபெறவுள்ள 'உலகத் தமிழ் கலைஞர் மாநாட்டிற்கான' டீசர் அறிமுக விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இராஜமாணிக்கம் , சீர்காழி சிவசிதம்பரம் , திரைப்பட பாடலாசிரியர் கபிலன் , காந்தி கண்ணதாசன் நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர் .

நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய சங்க நிர்வாகிகள் , அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் மாநாட்டு தேதி அறிவிக்கப்படுமெனவும் , 3 நாட்கள் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் 10, 000 கலைஞர்கள் மேடையேற்றப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர் .

நாட்டுப்புறக் கலைஞர்கள் , கலைத்துறையில் சாதித்தவர்கள் , எழுத்தாளர்கள் , திரைக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் மூன்று நாள் நிகழ்வில் பங்கேற்கலாம் எனவும் சிறுவர்களுக்கும் , மாணவர்களுக்கும் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் கூறினார்.
மேலும் யாழ் நூலக எரிப்பின் நினைவாக இந்நிகழ்வு யாழ்ப்பாணம் நகரில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர் .

Conclusion:இதனையடுத்து பின்னணி பாடகர் வேல்முருகன் அம்மா அப்பா குறித்த சிறப்பு பாடல்களை பாடினார் இவரைத் தொடர்ந்து சீர்காழி கோவிந்தராஜன் தமிழ் குறித்த பாடல்களை பாடினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.