ETV Bharat / state

'ஆறப்போட்டால் அமைதியாகிவிடுவார்கள் என்று நினைக்க வேண்டாம்' - உதயநிதி - Sathankulam death udhayanidhi stalin

தூத்துக்குடி: ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உயிரிழப்புச் சம்பவத்தை ஆறப்போட்டால் அமைதியாகிவிடுவார்கள் என்று நினைக்க வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

#JusticeForJeyarajAndFenix  சாத்தான்குளம் படுகொலை  சாத்தான்குளம் காவல் நிலைய மரணம்  உதயநிதி ஸ்டாலின்  திமுக  udhay  udhayanidhi stalin tweet  Sathankulam death udhayanidhi stalin
சாத்தான்குளம் வணிகர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க திமுக துணை நிற்கும்'- உதயநிதி
author img

By

Published : Jun 27, 2020, 10:19 PM IST

Updated : Jun 27, 2020, 10:47 PM IST

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தனர். இவர்களைக் காவல் துறையினர்தான் அடித்துக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவர்களின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.

தமிழ்த் திரைப்பிரபலங்களான ஜெயம் ரவி, குஷ்பு, வரலட்சுமி சரத்குமார், சுசித்ரா, கிரிக்கெட் வீரர் ஷிகார் தவான் உள்ளிட்ட பலரும் வணிகர்களின் மரணத்திற்கு நீதி வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் #JusticeForJeyarajAndFenix என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டானது.

#JusticeForJeyarajAndFenix  சாத்தான்குளம் படுகொலை  சாத்தான்குளம் காவல் நிலைய மரணம்  உதயநிதி ஸ்டாலின்  திமுக  udhay  udhayanidhi stalin tweet  Sathankulam death udhayanidhi stalin
உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

இச்சூழலில், உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டுக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த அவர், "ஆறப்போடுவோம் அமைதியாகிவிடுவார்கள், என நினைக்காதீர்கள் முதலைமைச்சரே. அந்தக் குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும், தவறிழைக்க நினைப்பவர்களை எச்சரிக்கும் வகையிலும் உங்களின் நடவடிக்கைகள் அமையும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: 'உயிர்குடிக்கும் மாவட்டமாக மாறும் தூத்துக்குடி' - ஸ்டாலின் காட்டம்

Last Updated : Jun 27, 2020, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.