திமுக வேட்பாளர் நேர்காணல் மார்ச் 2ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று (மார்ச் 6) நிறைவு பெற்றது.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 8,388 விருப்பமனுக்கள் பெறப்பட்டன. அதில் 7,967 பேர் விருப்பமனுக்களை தாக்கல் செய்தனர்.
அவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினர்.
கடைசி நாளான இன்று (மார்ச் 6) வேட்பாளர் நேர்காணலில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை.
நேர்காணலின்போது தொகுதி நிலவரம், தேர்தல் செலவுகள் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
இதையும் படிங்க: அதிமுக வேட்பாளர் நேர்காணல் விறுவிறுப்பு!