சென்னை, பள்ளிகரணை அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது அதிமுக பேனர் விழுந்தது. அதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது சாலையில் எதிர்பாராதவிதமாக வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறி விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பேனர் விழுந்து ஒரு உயிர் பறிபோயிள்ளது, அலுவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசை சாடியுள்ளது.
இந்நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பாக கோரிய கருத்து முற்றிலும் போலியானது, அது உண்மையில்லை என்று அவர்களது தரப்பினர் கூறியுள்ளனர். இதில் உதயநிதி ஸ்டாலின் "திமுகவினர் பேனர் வைத்தால் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவேன்" என்று அவர் கூறியது போலியானது என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயக்குமார் "ஆயிரம் பேனர் வைத்தால் ஒரு பேனர் விழத்தான் செய்யும், வாகன ஓட்டிகள் தான் கவனமாக செல்ல வேண்டும்" என்று கூறியது பொய், வதந்தியை பரப்புகின்றனர் என்று ட்விட்டரில் அவரது ரசிகர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.