ETV Bharat / state

தண்டையார்பேட்டையில் கரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த உதயநிதி - corona treatment center in Thandayarpet

தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனையில் தனியார் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள 60 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

udhayanidhi-stalin-started-a-corona-treatment-center-in-thandayarpet
தண்டையார்பேட்டையில் கரோனா சிகிச்சை மையத்தை தொடங்கிவைத்த உதயநிதி
author img

By

Published : May 25, 2021, 9:53 PM IST

சென்னை: ஆறு மருத்துவர்கள், 20 செவிலியர்கள் பணியாற்ற உள்ள இந்த கரோனா சிகிச்சை மையம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் செயல்படவுள்ளது.

இவ்விழாவில் டிஎஸ்எஸ் நாடார்கள் மேல்நிலைப்பள்ளி, முருக தனுஷ்கோடி மேல்நிலைப் பள்ளி, கேசிஎஸ் கமிட்டி ஆகியவை இணைந்து வழங்கிய ஆம்புலன்ஸை மக்கள் பயன்பாட்டுக்காக கொடியசைத்து உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தண்டையார்பேட்டையில் கரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த உதயநிதி

தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர், ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்த நபர்களுக்கு நன்றி தெரிவித்ததார். தொடர்ந்து, விழாவின் முடிவில் முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு அப்பகுதி மக்கள் நிதியளித்தனர்.

இதையும் படிங்க: வீரப்பனிடம் குண்டு அடிபட்ட காவலர் கர்நாடகாவில் மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.