சென்னை: இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ’Article 15’ படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், நடிகை தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று (அக்.02) இப்படத்தில் நடித்து வரும் நடிகர் மயில்சாமி தனது பிறந்தநாளைக் கொண்டாடியதை அடுத்து, இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, அனைவருடனும் இணைந்து மகிழ்ச்சியுடன் மயில்சாமி கேக் வெட்டினார்.
மேலும், தனது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் மயில்சாமி 300 குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், மயில்சாமியின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி வழங்கினார்.
இதையும் படிங்க:சாதனை படைத்த 'ருத்ர தாண்டவம்'