சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்குழுவிடம் நீட் தேர்வு பாதிப்பு குறித்த கருத்துகளை மக்கள் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பலரும் தங்கள் கருத்துகளை ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவுக்கு அனுப்பிவரும் நிலையில், இன்றுடன் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் முடிகிறது.
இந்நிலையில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசனும் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த தங்களது கருத்தை இன்று ஏ.கே. ராஜனிடம் மனுவாக அளித்தனர்.
பின்பு, ஏ.கே. ராஜனிடம் எழிலரசன் சில பரிந்துரைகளை கூறினார். அப்போது, 'நான் எவ்வளவு காலமா இந்த நீட் தேர்வு வேணாம்னு எழுதியிருக்கேன் தெரியுமா? என எழிலரசனை நோக்கி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் தனிப்பட்ட முறையில் கருத்து கேட்கவேண்டும் என எழிலரசன் சொல்ல, 'வழக்கமா இதுபோல் கருத்தை தெரிவிப்பவர்களிடம் இதுபோல் உட்கார வைத்து பேசுவதில்லை. மனுவை வாங்கிக்கொண்டு படித்துப்பார்த்து, பரிந்துரைக்கு அனுப்புவேன்' எனக் கூறினார்.
இதைத்தொடர்ந்து எம்எல்ஏக்கள் இருவரும் ஓய்பெற்ற நீதிபதிக்கு நன்றி கூறிவிட்டு சென்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதகம் இல்லாமல் முடிவு : உதயநிதி ஸ்டாலின்