ETV Bharat / state

பெண் பயணியை தாக்கிய ஊபர் ஆட்டோ ஓட்டுநர் கைது - சென்னையில் ஊபர் ஆட்டோ ஓட்டுநர் கைது

சென்னை: சில்லறை பிரச்னை தொடர்பாக பெண் பயணியை தாக்கிய ஊபர் ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பெண் பயணியை தாக்கிய ஊபர் ஆட்டோ ஓட்டுநர் கைது
பெண் பயணியை தாக்கிய ஊபர் ஆட்டோ ஓட்டுநர் கைது
author img

By

Published : Dec 20, 2019, 4:12 AM IST

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மோனிஷா (30). இவர் தனது சகோதரர் கபில் (27) என்பவருடன் நேற்று ஊபர் ஆட்டோவில் தேனாம்பேட்டைக்குச் சென்றுள்ளார். அப்போது புரசைவாக்கம் ELM பள்ளி அருகே சில்லறை பிரச்னை தொடர்பாக அவர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இதுவரை பயணம் செய்த தொகையான 70 ரூபாயைக் கொடுத்துவிட்டு இருவரையும் இறங்குமாறு ஆட்டோ ஓட்டுநர் ஜோதி (31) என்பவர் கூறியுள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே ஆட்டோ ஓட்டுநரான ஜோதிக்கும், கபிலுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இந்த கைகலப்பில் ஆட்டோ ஓட்டுநர் மோனிஷாவையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மோனிஷா, அவரது சகோதரர் கபில் ஆகிய இருவரும் வேப்பேரி காவல் நிலையத்தில் ஊபர் ஆட்டோ ஓட்டுநர் மீது புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ஆட்டோ ஓட்டுநரான ஜோதியை கைது செய்தனர்.

இதையும் படிங்க: ஆட்டுக்கறி வழங்காததால் கணவர் ஆத்திரம் - மனைவி எரித்துக் கொலை

Intro:Body:*பெண் பயணியை தாக்கியதாக ஊபர் ஆட்டோ டிரைவர் கைது!*

சென்னை பெரம்பூர் சேர்ந்தவர் மோனிஷா (30). இவர் தனது சகோதரர் கபில் (27) என்பவருடன் நேற்று உபர் ஆட்டோவில் தேனாம்பேட்டை வருவதற்காக வந்துள்ளார். அப்போது புரசைவாக்கம் ELM பள்ளி அருகே வந்த போது, சில்லறை பிரச்சனை தொடர்பாக அவர்களுக்கும், ஆட்டோ டைரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இதுவரை பயணம் செய்த தொகையான ரூபாய் 70 ஐ கொடுத்துவிட்டு இருவரையும் இறங்குமாறு ஆட்டோ டிரைவரான புளியந்தோப்பு சேர்ந்த ஜோதி(31) என்பவர் கூறியுள்ளார் .

இதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே ஆட்டோ டிரைவரான ஜோதிக்கும் கபிலுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கைகலப்பில் ஆட்டோ டிரைவர் மோனிஷாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மோனிஷா மற்றும் அவரது சகோதரர் கபில் ஆகிய இருவரும் வேப்பேரி காவல் நிலையத்தில் ஊபர் ஆட்டோ டிரைவர் மீது புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆட்டோ டிரைவரான ஜோதியை கைது செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.