ETV Bharat / state

பொழிச்சலூரில் இருசக்கர வாகனம் திருட்டு : சிசிடிவி காட்சி வெளியீடு - chennai district news

சென்னை : பொழிச்சலூரில் கல்லூரி மாணவனின் இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் லாவகமாக திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி
author img

By

Published : Nov 11, 2020, 4:44 PM IST

சென்னை, பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் உமேஷ் (வயது 20). இவர் நேற்று (நவ.10) இரவு வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்றிருந்தார்.

ஒரு மணி நேரம் கழித்து, அவர் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போய் இருந்தது. உடனே சுதாரித்து அருகில் இருந்த ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக் காட்சிகளைக் கோரி அவர் பார்த்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு பேர் லாவகமாக உமேஷின் இருசக்கர வாகனப் பூட்டை உடைத்து திருடிச் செல்லும் காட்சி அதில் பதிவாகியிருந்தது தெரிய வந்தது.

சிசிடிவி காட்சி

அதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் உமேஷ் புகார் அளித்தார். தற்போது சிசிடிவி காட்சி அடிப்படையில் காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் திருடிய இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.