ETV Bharat / state

நாளை வாக்குப்பதிவு: திரையரங்குகளில் இரண்டு காட்சிகள் ரத்து

தமிழ்நாட்டில் நாளை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அனைத்து திரையரங்குகளிலும் காலை 10 மணி காட்சியும் மற்றும் பிற்பகல் 2 மணி காட்சியும் ரத்து  செய்யப்படுகிறது.

தமிழ்நாடு திரையரங்கம்
author img

By

Published : Apr 17, 2019, 6:56 PM IST

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பதை தீர்மானிக்கும் மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் இரவு பகல் பாராமல் தேர்தல் பரப்புரை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டமாக மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை நிறைவுற்றது.

ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 100 விழுக்காடு வாக்குப்பதிவை நோக்கி தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் காலை 10 மணி காட்சியும் பிற்பகல் 2 மணி காட்சியும் ரத்து செய்யப்படுகிறது என்றும் மாலை 6 மணி காட்சி வழக்கம் போல் திரையிடப்படும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேபோன்று தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு பாண்டிச்சேரியிலும் இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

விடுமுறை தினத்தை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு வர வாய்ப்புள்ளது. இதனால் தேர்தல் வாக்குப்பதிவு பாதிக்கப்படும் என்பதை கணக்கில் கொண்டு காலை மற்றும் மதியக் காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது.

தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு திரையரங்குகளில் இரண்டு காட்சிகள் ரத்து .

தமிழகத்தில் நாளை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் காலை 10 மணி காட்சியும் மற்றும் பிற்பகல் 2 மணி காட்சியும் ரத்து  செய்யப்பட்டுள்ளதாகவும் மாலை 6 மணி காட்சி வழக்கம் போல்  திரையிடப்படும் என்றும்  திரைையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில்் தெரிவிக்கப்பட்டுள்ளது .
 இதேபோன்று தேர்தலை வாக்குப்பதிவை முன்னிட்டு பாண்டிச்சேரியிலும் இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.