ETV Bharat / state

ஊரடங்கு - காரில் தனியார் மருத்துவமனை ஸ்டிக்கரை போலியாக ஒட்டி சுற்றிய இருவர் கைது... - Two persons were arrested for forging private hospital sticker on car in chennai

ஊரடங்கு நேரத்தில் தனியார் மருத்துவமனை ஸ்டிக்கரை போலியாக ஒட்டிக்கொண்டு காரில் வலம் வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காரில் தனியார் மருத்துவமனை ஸ்டிக்கரை போலியாக ஒட்டி சுற்றி திரிந்த இருவர் கைது

author img

By

Published : Jan 10, 2022, 10:44 AM IST

சென்னை: கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வாரத்தின் கடைசி நாளான நேற்று தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாகத் தனியார் மருத்துவமனையின் ஸ்டிக்கரை ஒட்டி வந்த வந்த காரை நிறுத்தி விசாரித்தபோது தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் என காரில் இருந்த இருவரும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அவர்கள் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளனர். மேலும், மருத்துவர் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டபோது இருவரும் தனியார் மருத்துவமனையின் ஸ்டிக்கரை ஒட்டி மருத்துவர்கள் எனக் கூறிக்கொண்டு காரில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்கள் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் - மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய முக்கிய நகரங்கள்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.