ETV Bharat / state

அவசரத்திற்கு உதவிய நண்பனை கொள்ளை வழக்கில் கோர்த்து விட்ட திருடன்… சென்னையில் சுவாரஸ்ய சம்பவம்!! - gold chain snatching case

ஹெல்மெட்டுடன் வந்து மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி இரண்டரை சவரன் தங்க நகையை கொள்ளையடித்த வழக்கில் ரவுடியின் நண்பர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 1, 2023, 2:45 PM IST

சென்னை அமைந்தகரை ஷெனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வர்ணம்(82). மூதாட்டியான இவர் நேற்று முன்தினம் மாலை அமைந்தகரை மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது ஹெல்மெட்டுடன் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூதாட்டி ஸ்வர்ணத்திடம் பேச்சுக் கொடுத்து உள்ளார். பின்னர் அந்த நபர் தனது மகளுக்கு அடுத்த வாரம் திருமணம் வைத்துள்ளதாகவும், திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க வந்திருப்பதாகவும் மூதாட்டியிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அந்த நபர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பார்த்து இதே போன்ற செயின் தான் தனது மகளுக்கு வாங்க இருப்பதாக கூறிவிட்டு அந்த செயினை ஒரு முறை போட்டோ எடுத்து விட்டு தருவதாக வாங்கியுள்ளார். பின்னர் அருகில் இருந்த பீரோ கடையில், திருமணத்திற்காக ஒரு பீரோவை தேர்வு செய்து தருமாறு அந்த மூதாட்டியை அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் திடீரென அந்த நபர் 2.5 சவரன் செயினுடன் சாலையில் வந்த மாநகரப் பேருந்தில் ஏறி தப்பி சென்றுள்ளார். இதையடுத்து மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி 2.5 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்ற ஹெல்மெட் அணிந்த நபர் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் ஹெல்மெட்டுடன் ஏறிய அந்த கொள்ளையன் அடுத்த பேருந்து நிலையத்தில் இறங்கி பிறகு ஒருவருடன் பைக்கில் தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரித்து வடபழனி பகுதியை சேர்ந்த சிவகுமார்(42) மற்றும் சீனிவாசன்(47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் சுவாரஸ்ய தகவல் வெளியானது. கொள்ளையன் சிவகுமார் மீது ஒரு கொலை வழக்கு, கொள்ளை வழக்கு உட்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிவகுமாரின் பள்ளிக்கால நண்பரான சீனிவாசன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் சிவகுமார் கடைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனம் வேண்டும் என சீனிவாசனிடம் கேட்டுள்ளார். அப்போது ஏதாவது கொள்ளை சம்பவத்தில் இருசக்கர வாகனத்தை பயன்படுத்திவிட போகிறார் என சீனிவாசன் தானும் உடன் வருவதாக சிவகுமாரிடம் கூறிவிட்டு இருவரும் ஒன்றாக அமைந்தகரை எம்.எம்.டி.ஏ மார்க்கெட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் சீனிவாசனிடம் வண்டியிலேயே காத்திருக்க கூறிவிட்டு சிவகுமார் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் சிவகுமார் மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி விட்டு 2.5 சவரன் நகையை கொள்ளையடித்து விட்டு பேருந்தில் ஏறி தப்பிச் சென்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். பின்னர் நண்பர் சீனிவாசனிடம் அடுத்த பேருந்து நிலையத்திற்கு வருமாறு கூறிவிட்டு ஒன்றாக பைக்கில் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் கொள்ளையடித்த 2.5 சவரன் நகையை வடபழனியில் உள்ள அடகு கடையில் 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அடகு வைத்த 2.5 சவரன் நகையை மீட்டு குற்றத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். வண்டியை கொடுத்த பாவத்திற்கு நண்பனை சிறைக்கு அனுப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: Chennai Police Encounter: சென்னை அருகே போலீஸ் என்கவுண்டரில் 2 ரவுடிகள் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.