சென்னை: கிழக்கு கடற்கரைச்சாலையின் அருகே ஈஞ்சம்பாக்கம் செல்லும் வழியாக இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவலருக்குத் தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு இளைஞர்கள் வீலிங் செய்தவாறு, இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணையில் இருவரும் சோழிங்கநல்லூரில் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வரும் தியாகராஜன் (23), ஜே.சி.பி ஓட்டுநர் முத்துக்குமார் (20) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவலர்கள், அவரைக் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: விஷ பூச்சி கடித்ததில் சிறுவன் உயிரிழப்பு