ETV Bharat / state

கரோனா தொற்று பாதித்த செய்தியாளர் தங்கியிருந்த பகுதிகளுக்குச் சீல்! - சென்னை செய்தியாளருக்கு கரோனா

சென்னை: இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டு ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த பகுதிகளில், பொதுமக்கள் நுழைய மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

சென்னை  கரோனா  சென்னை செய்தியாளருக்கு கரோனா  two journalist get corona positive
கரோனா தொற்று பாதித்த செய்தியாளர் தங்கியிருந்த பகுதிகளுக்கு சீல்
author img

By

Published : Apr 19, 2020, 3:53 PM IST

கரோனா வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில், பொது சேவையில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் போன்றவர்கள் கரோனா தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களுக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருவர் திருவல்லிக்கேணி மேன்சன் ஒன்றில் தங்கியிருந்தார். அந்தப் பகுதிக்குள் பொதுமக்கள் நுழையத் தடை விதித்துள்ள மாநகராட்சி நிர்வாகம், தற்போது, அந்தப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவல்லிக்கேணி பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி

மேலும், அந்த மேன்சனில் தங்கியுள்ள 42 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பாதித்த இருவருக்கும் கரோனா பரவியது எவ்வாறு என்பது குறித்து தற்போது சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும்வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்: தமிழ்நாடு அரசு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.