சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஜெயின் கோயில் அருகே ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்துவந்த செம்மஞ்சேரி எழில் நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரை கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து காவல்துறையினர் ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் பன்னீர்செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: