ETV Bharat / state

டபுள் தமாக்கா!...ஒரே நாளில் வெளியாகும் விமலின் இரண்டு படங்கள்! - vetri maran

நடிகர் விமல் நடிப்பில் உருவாகியிருக்கும், 'தெய்வ மச்சான்', ‘குலசாமி’ ஆகிய இரண்டு படங்களும் ஏப்ரல் 21 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

same day release vimal two movies on april 21
ஒரே நாளில் வெளியாகும் விமலின் இரண்டு படங்கள்!
author img

By

Published : Apr 7, 2023, 8:30 PM IST

நடிகர் விமல் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தவர். திரையுலகில் தனக்கான அடையாளத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்த இவர் ஒருவழியாக இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க’ படத்தின் மூலம், நாயகனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதில் சிறார்கள் தான் கதை நாயகர்கள் என்றாலும், விமலுக்கும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து ‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘கலகலப்பு’ என தனது திரை வாழ்வில் குறிப்பிடத்தக்க படங்களில் விமல் நடித்தார். மேலும், இவர் ‘வாகை சூட வா’ என்னும் படத்தில் வேலுத்தம்பி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்காக, இவருக்கு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடம்‌ பிடித்துவிட்டார். கடந்த ஆண்டு இவர் நடித்த முதல் இணைய தொடரான ‘விலங்கு’ மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தெய்வ மச்சான்'. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், பாலா, சரவணன், வேல், ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கேமில் ஜே.அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு காட்வின் இசையமைக்கிறார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மார்ட்டின் மற்றும் வத்சன் இணைந்து எழுதியிருக்க, படத்தின் பின்னணி இசையை அஜீஷ் கவனிக்கிறார். மேலும், எடிட்டர் இளையராஜா படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

கிராமிய பின்னணியில் ஃபேண்டசி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை உதய் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம்.பி. வீரமணி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி, சூரி, ஆதி மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டனர்.

இந்த திரைப்படம், ஏப்ரல் 21 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இதனைத் தொடர்ந்து, சரவண சக்தி இயக்கத்தில் விமல் நடித்துள்ள படம் ‘குலசாமி’. இப்படத்துக்கு, நடிகர் விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார். தன்யா ஹோப் நாயகியாக நடித்துள்ளார். இப்படமும் வருகிற 21 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே நாளில் நடிகர் விமல் நடித்துள்ள இரண்டு படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Indian 2: தைவானில் இந்தியன் 2 படக்குழு; புதிய அப்டேட் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.