ETV Bharat / state

ஆவடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய 2 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு! - 2 people died when clean the sewage tank

Avadi news: ஆவடி மத்திய அரசு ஒ.சி.எப் குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிந்துள்ளனர்.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய 2 பேர் பலி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 9:24 PM IST

திருவள்ளூர்: ஆவடியில் மத்திய அரசு ஒ.சி.எப் குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதால், அதை சரி செய்வதற்காக பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த மோசஸ் மற்றும் ஆவடி பஜார் தெருவைச் சேர்ந்த தேவன் ஆகிய இருவரும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கி உள்ளனர்.

  • ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/9YJWTwVuS3

    — CMOTamilNadu (@CMOTamilnadu) September 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் இருவரும் மயக்கம் அடைந்துள்ளனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்: சென்னை உயர்நீதிமன்றம்

அங்கு பரிசோனை செய்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து, இருவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆவடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இவர்கள் இருவரும் ஆவடி ஒ.சி.எப் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய இறங்கிய இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ருபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: உதயநிதிக்கு எதிராக யூடியூபர் மனீஷ் காஷ்யப் தாயார் குடியரசுத் தலைவருக்கு கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.