சென்னை: தரமணி பகுதியைச் சேர்ந்தவர், முருகன். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று (பிப்.8) மாலை முருகன், அவரது நண்பர்களான சார்லஸ், ஹேம்நாத் ஆகியோருடன் தரமணியில் உள்ள பாரில் மது அருந்தியுள்ளார்.
அப்போது முருகனுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாரிலிருந்து வெளியே வந்த முருகனை அவரது நண்பர்கள் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
நண்பர்கள் இடையே தகராறு
பின்னர் ரத்தக் காயங்களுடன் இருந்த முருகனை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல் துறையினர் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் முருகனின் நண்பர்களைக் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
கத்திக் குத்து
இந்நிலையில் முருகனை அவரது நண்பர்கள் கத்தியால் குத்தும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அதிமுக வேட்பாளர்களை மிரட்டும் திமுக நிர்வாகி - காவல் நிலையத்தில் புகார்