ETV Bharat / state

சிசிடிவி: மதுபோதையில் கட்டையால் காவலாளியை தாக்கிய இருவர் கைது

சென்னை அருகே மதுபோதையில் கட்டையால் காவலாளியை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

சிசிடிவி
சிசிடிவி
author img

By

Published : Aug 4, 2022, 7:17 PM IST

சென்னை: மதுரவாயல் அடுத்த வானகரம் சர்வீஸ் சாலை அருகே கே.ஜி அப்பார்ட்மெண்ட் உள்ளது. இதில் செல்வம் (60) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் வந்த சிலர் அபார்ட்மெண்ட் முன்பு வாகனத்தில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு சாலையில் விழுந்துள்ளனர்.

இந்நிலையில் அருகே இருந்த காவலாளியிடம் மதுபோதையில் ஒருமையில் பேசி தண்ணீர் கேட்டுள்ளனர். இதற்கு காவலாளி தண்ணீர் இல்லை என கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மதுபோதை ஆசாமிகள் விஜேந்தர் (26) மற்றும் பாக்கிய சுதன் (23) இருவர் சேர்ந்து கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் காவலாளியை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

சிசிடிவி

இதில் பலத்த காயமடைந்த காவலாளி அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவலாளியின் உறவினர்கள் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மதுபோதையில் கட்டையால் காவலாளிய தாக்கிய இருவரை கைது செய்து மதுரவாயல் போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 'கீழ்த்தரமான செயல்' - ஓபிஎஸ்ஸை கண்டித்த நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.