நாகர்கோவிலைச் சேர்ந்த எஸ்.ஆர்.குமார் என்பவர், கை துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்தார். ஆனால், ஏற்கனவே பெரிய துப்பாக்கி வைத்திருப்பதாகக் கூறி, கை துப்பாக்கி உரிமம் வழங்க மறுத்து மாவட்ட ஆட்சியரும், வருவாய் நிர்வாக ஆணையரும் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், பெரிய துப்பாக்கி வைத்திருந்தார் என்பதற்காக, கை துப்பாக்கி உரிமம் பெற உரிமையில்லை எனக் கூற முடியாது எனவும், இரு ஆயுத உரிமங்கள் வைத்துக் கொள்வதற்கு ஆயுத சட்டத்தில் எந்த தடையும் இல்லை எனவும் கூறி, மனுதாரருக்கு கை துப்பாக்கி உரிமம் வழங்குவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிக்கையைப் பெற்று பரிசீலிக்கும்படி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.