சென்னை: தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து பேருந்துகள், ரயில்களில் மூலம் சொந்த ஊர்களுக்கு கடந்த 3 நாட்களில் 12 லட்சம் பேர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். கடந்த இரு நாட்களில் மட்டும் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இன்று (அக் 24) கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
அதேபோல, சென்னை பூந்தமல்லி தற்காலிக பேருந்து நிலையமும் வெறிச்சோடி காணப்படுகிறது. சென்னையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. எப்போதும் பரபரப்புடன் காணப்படும் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி. சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் கூட போக்குவரத்து இன்றி காணப்படுகின்றன.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் மக்கள் சிரமமின்றி தங்களது ஊர்களுக்கு சென்றுள்ளனர். தீபாவளிக்கு மறுநாளான நாளைக்கு சொந்த ஊர் சென்று சிரமமில்லாமல் வருவதற்கு கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாடி முடித்துவிட்டு பயணிகள், வெளியூரில் இருந்து சென்னை வருவதற்கும், இதேபோன்று அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ மரியாதையுடன் வீரரின் உடல் நல்லடக்கம்