டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனம் நிகழாண்டு ஜனவரி மாதத்தில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 439 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்தது. 2019 ஜனவரியில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 277 இருச்சக்கர வாகனங்களை டி.வி.எஸ் விற்பனை செய்த நிலையில், தற்போது அதன் விற்பனை 18.13 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளது.
உள்நாட்டில் கடந்தாண்டு ஜனவரியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 654 வாகனங்களை விற்பனை செய்த டி.வி.எஸ் நிறுவனம், 2020 ஜனவரியில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 7 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது 27 விழுக்காடு விற்பனை குறைவாகும். அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களின் அளவு 34 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இரண்டு, மூன்று சக்கர வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை 16.88 விழுக்காடு சரிவடைந்துள்ளதாக டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதால், விற்பனை சரிவை ஈடுகட்டும் வகையில் டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தியை குறைத்து வருகிறது.
இதையும் படிங்க: காக்னிசன்ட் நிறுவனம் ரூ.23 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு