ஜேம்ஸ் லான்ஸ்டோன் நார்டன் என்பவரால் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 1898ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நார்டன் மோட்டர் சைக்கிள்ஸ் நிறுவனத்தை, 16 மில்லியன் பவுண்டுக்கு, இந்திய மதிப்பில் 153 கோடி ரூபாய்க்கு டிவிஎஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
நார்டன் நிறுவனத்தின் பழங்கால இருசக்கர வாகனங்கள், தற்போதைய சொகுசு மின்சார வாகனங்கள் சர்வதேச சந்தையில் மிகவும் பிரபலமானவை.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த டிவிஎஸ் மோட்டர்ஸ் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் சுதர்சன் வேணு, "உலகப்புகழ் பெற்ற நார்டன் நிறுவனத்தை வாங்கியது மிகவும் பெருமையாக உள்ளது. நார்டன் தனது தனித்துவமான பெயருடனும், தனி திட்டங்களுடனும் இயங்கும். இந்த கையகப்படுத்தல் மூலம் டிவிஎஸ் நிறுவனம் சர்வதேச சந்தையை எளிதாக அணுக முடியும், புதிய சந்தைகளில் விரிவடைய முடியும்" என்றார்.
இதன்மூலம் சர்வதேச இருசக்கர வாகன சந்தையில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துவருவதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் பார்க்க: கரோனாவை எதிர்கொள்ளுதல்: சார்க் நாடுகளுக்கு இந்தியா பயிற்சி