ETV Bharat / state

சிறப்பு நகைக்கடன்களுக்கான தவணை காலத்தை நீட்டிக்க வேண்டும் - டிடிவி தினகரன் - மத்திய கூட்டுறவு வங்கிகள்

சென்னை: மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட சிறப்பு நகைக்கடன்களுக்கான தவணை காலத்தை ஓராண்டாக நீட்டிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TTV
TTV
author img

By

Published : Dec 17, 2020, 3:03 PM IST

தமிழ்நாட்டில் மொத்தம் 4 ஆயிரத்து 473 தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களும், 220 நகர கூட்டுறவு கடன் சங்கங்களும் செயல்பட்டுவருகின்றன. இந்த வங்கிகள் மூலம் விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வங்கிகளில் நகைக்கடன் வாங்கியவர்களுக்கு தவணை காலத்தை நீட்டிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

TTV
டிடிவி தினகரன் ட்வீட்

இதுகுறித்து தினகரண் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகம் முழுவதும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 6 மாத தவணையில் வழங்கப்பட்ட சிறப்பு நகைக்கடன்களுக்கான தவணை காலத்தை ஓராண்டாக நீட்டித்து வழங்க வேண்டும்.

கடந்த ஜூன் மாதம் முதல் வழங்கப்பட்ட இக்கடன்களுக்கான தவணைக்காலம் டிசம்பர் மாதத்தோடு முடிவடைவதால் அதற்கான வட்டியைக் கட்டி மறுஅடகு வைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

கரோனா பாதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இது கூடுதல் சுமையாகி இருக்கிறது. எனவே, 6 மாத தவணையில் வழங்கப்பட்ட சிறப்பு நகைக்கடன்கள் அனைத்தையும் ஓராண்டு தவணையாக மாற்றி அறிவிக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.