இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " மூன்றாவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் அடித்தட்டு மக்களுக்குக் கூடுதல் நிவாரணத்தைத் தமிழ்நாடு அரசு அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது.
வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கும், குடும்ப அட்டைதாரர்களுக்கும் குறைந்தப்பட்சம் இரண்டாயிரம் ரூபாய் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இதைப் போலவே பேரிழப்பைச் சந்தித்திருக்கும் சிறு, குறு தொழில்களுக்கான உதவித் தொகுப்பையும் மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.
பணியாளர்களின் ஊதியத்தில் தொடங்கி மீண்டும் செயல்படுவதற்குக்கூட நிதியில்லாமல் தடுமாறும் அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு கை கொடுக்க வேண்டியதும் அரசுகளின் கடமை என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வர்த்தக சங்கத் தலைவரைத் தாக்கிய காவலர் இடமாற்றம்