ETV Bharat / state

திருவொற்றியூரில் பரப்புரை மேற்கொண்ட டிடிவி தினகரன்! - TTN Dinakaran election campaign

சென்னை: திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.

TTV Dinakaran
டிடிவி தினகரன்
author img

By

Published : Mar 16, 2021, 10:23 PM IST

திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கழக வேட்பாளர் சௌந்தரபாண்டியனை ஆதரித்து, அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "சராசரி அரசியல்வாதிகள் செய்யும் தவறான செயல்களை நமது வேட்பாளர் செய்யமாட்டார். அவருக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மக்களைப் பாதிக்கின்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. நம்மை எதிர்த்து தீய சக்திகளும், துரோக சக்திகளும் போட்டியிடுகின்றன.

திருவொற்றியூரில் பரப்புரை மேற்கொண்ட டிடிவி தினகரன்

டீசல், பெட்ரோல் விலை குறைக்காமல், ஓட்டுக்குப் பணம் கொடுத்து ஆட்சிக்கு வந்து விடலாம் என ஆளும் கட்சி நினைக்கிறது. மக்களை முழுமையாக நம்பி களம் காணும் இயக்கம் அமமுகதான்.

மீத்தேன், எட்டு வழிச்சாலை, நீட் தேர்வு உள்ளிட்டவை வர திமுகதான் முதற்காரணம். தமிழ்நாட்டில் வீட்டில் ஒருவருக்கு வேலை தருவோம், வேலை இல்லா திண்டாட்டம் இல்லாமல் ஆக்குவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'சீட் தராததால் கண்ணீர்விட்ட எம்எல்ஏ - ரங்கசாமி காரின் முன்பு படுத்து தர்ணா'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.