இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொழிலையும், உழைப்பையும் போற்றி வணங்கும் ஆயுத பூஜையையும், வெற்றித்திருநாளான விஜயதசமியையும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகம் இதுவரை காணாத பேரிடரில் இருந்து மெல்ல மீண்டு வருகிறோம். முழுவதுமாக இதில் இருந்து வெளியில் வந்து பழைய இயல்பு வாழ்க்கையை பெறுவதற்கான உடல் மற்றும் மன ஆற்றல் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாளில் வழிபடுவோம்.
அன்பின் வடிவமாக திகழ்ந்து அகிலத்தை காத்திடும் அன்னை பராசக்தியை துர்க்கை, லட்சுமி, சாஸ்வதி வடிவங்களில் 9 நாள்கள் வழிபட்டு அதன் நிறைவில் அவரவர் தொழிலையும், தொழிலுக்கான கருவிகளையும் வணங்குவதே இந்நாளின் சிறப்பு.
இந்த ஆண்டு அவரவருக்கு மட்டுமின்றி, சுற்றியுள்ள அனைவரின் தொழிலும் வாழ்வும் சிறந்திட வேண்டுமென மனப்பூர்வமாக இறையருளை வேண்டுவோம். எதிர்மறை சிந்தனைகளை அகற்றி, புதிய சாதனைகள் புரிவதற்கான பணிகளை வெற்றித்திருநாளான விஜயதசமியில் தொடங்கிடுவோம்.
தீயசக்திகளை வீழ்த்திட உறுதி ஏற்பதுடன், நல்லோருக்கும் நன்றி மறவாதோருக்கும் நானிலத்தில் எப்போதும் தனி மதிப்புண்டு என்பதை செயலில் காட்டுவோம். அன்னை சக்தியின் அருளால் தமிழ்நாடு மக்களுக்கு அத்தனை நலன்களும் கிடைத்திட அன்போடு வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி