ETV Bharat / state

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தினகரன் கண்டனம்!

சென்னை: அறந்தாங்கியில் பெரியார் சிலையை அவமதிக்கப்பட்டதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

டிடிவி தினகரன்
author img

By

Published : Apr 8, 2019, 8:07 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பெரியார் சிலை கடந்த 1998 ஆம் ஆண்டு திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்களால் பெரியாரின் சிலையின் தலைபாகம் உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் எப்படியாவது சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி, தேர்தல் நேரத்தில் ஆதாயம் தேடத்துடிக்கிற இத்தகைய செயல்கள் இழிவானவை.

இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பெரியாரை வெறுப்பவர்களோடு கை கோர்த்துக்கொண்டு நிற்கிற எடப்பாடி பழனிச்சாமி அரசாங்கம், தலைவர்களுக்கு நிகழும் இதுபோன்ற அவமரியாதைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 08.04.19

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தினகரன் கண்டனம்!

அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டரில்,
அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் எப்படியாவது சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி, தேர்தல் நேரத்தில் ஆதாயம் தேடத்துடிக்கிற இத்தகைய செயல்கள் இழிவானவை.

இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பெரியாரை வெறுப்பவர்களோடு கை கோர்த்துக்கொண்டு நிற்கிற பழனிச்சாமி அரசாங்கம், தலைவர்களுக்கு நிகழும் இது போன்ற அவமரியாதைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.