ETV Bharat / state

ஆசிரியர் தகுதித் தேர்வில் 1 விழுக்காடு கூட தேர்ச்சி பெறவில்லை!

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்று, முடிவுகள் வந்த நிலையில் தேர்வு எழுதியவர்கள் ஒரு விழுக்காடு கூட தேர்ச்சி பெறவில்லை என்பது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 1 சதவீதம் கூட தேர்ச்சி பெறவில்லை
author img

By

Published : Aug 23, 2019, 2:32 PM IST

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுத் தாள்-1 க்கான தேர்வு ஜூன் 8ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்தத் தேர்விற்கான முடிவுகள் ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வில் 551 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பெண்கள் 410, ஆண்கள் 141 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல் செப்டம்பர் 22ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. அதனைத் தேர்வர்கள் அன்றைய தேதிவரை பதிவிறக்கம் செய்திடலாம் என கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தாள் ஒன்று தேர்வினை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதிய நிலையில் 551 (0.38 விழுக்காடு) பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள், trb paper 1 ans 2 result details
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பத்திரிகை செய்தி

இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ற்கான தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்விற்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21ஆம் தேதியன்றே ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 தேர்வினை மூன்று லட்சத்து 79 ஆயிரத்து 733 தேர்வர்கள் எழுதினர். இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 26ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாகவும், இந்தத் தேர்வினை எழுதியவர்களில் 316 பேர் (0.08 விழுக்காடு) மட்டுமே தகுதிபெற்றுள்ளனர்.

இதில், பொதுப்பிரிவினர் 150 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்களும், பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. உள்ளிட்ட இட ஒதுக்கீட்டுப்பிரிவினர் 82 மதிப்பெண்களும் பெற வேண்டும். இந்நிலையில் தேர்வு எழுதியவர்களில் ஒரு விழுக்காட்டிற்கும் கீழ் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்தத் தகவல் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இது குறித்து கல்வியாளர் ஒருவர் கூறுகையில், "ஆசிரியர் தகுதித் தேர்வில் உளவியல் பாடத்தினை முழுவதுமாக படித்து எழுதும் மாணவர்கள் மட்டுமே முழுமையாக தகுதிபெற முடியும். ஆசிரியர் பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பினை மாணவர்கள் முழுவதும் கல்லூரிக்கு சென்று படித்திருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

Intro:ஆசிரியர் தகுதித் தேர்வில் 1 சதவீதம் கூட தேறாதவர்கள் Body:ஆசிரியர் தகுதித் தேர்வில் 1 சதவீதம் கூட தேறாதவர்கள்

சென்னை,
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 க்கான தேர்வு 8. 6.2019 அன்று நடைபெற்றது. இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் 20. .2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வில் 551 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் 410 பேர் மற்றும் ஆண்கள் 141 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல் 22 ந் தேதி வெளியிடப்படவுள்ளது. அதனைத் தேர்வர்கள் 22. 9.2019 வரை பதிவிறக்கம் செய்திடலாம் என கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தாள் ஒன்று தேர்வினை 1 லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதிய நிலையில் 551 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 0.38 சதவீதம் (பூஜியம் புள்ளி 38) பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 க்கான தேர்வு 09.06.2019 அன்று நடைபெற்றது. இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் 21. 8.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 தேர்வினை 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 தேர்வர்கள் எழுதினர். இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 26 ந் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்தத் தேர்வினை எழுதியவர்களில் 316 பேர் மட்டுமே தகுதிப் பெற்றுள்ளனர். தகுதிப்பெற்றவர்களின் விகிதம் 0.08 (பூஜியம் புள்ளி 8 சதவீதம் ) பேர் தகுதிப்பெற்றுள்ளனர்.

பொதுப்பிரிவினர் 150 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்களும், பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., எஸ்சிஏ உள்ளிட்ட இட ஒதுக்கீட்டுப்பிரிவினர் 82 மதிப்பெண்களும் பெற வேண்டும். இந்த நிலையில் தேர்வு எழுதியவர்களில் ஒரு சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தகவல் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கல்வியாளர் ஒருவர் கூறும்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் உளவியல் பாடத்தினை முழுவதுமாக படித்து எழுதும் மாணவர்கள் மட்டுமே முழுமையாக தகுதிப் பெற முடியும். ஆசிரியர் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பினை மாணவர்கள் முழுவதும் கல்லூரிக்கு சென்று படித்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.