ETV Bharat / state

பொங்கல் தின சிறப்புப் பேருந்து: முன்பதிவில் 10.80 கோடி ரூபாய் வருமானம் - பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கம்

சென்னை: 2020ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, முன்பதிவு வாயிலாக 10.80 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

government bus
government bus
author img

By

Published : Jan 14, 2020, 10:57 PM IST

சென்னை, போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வாயிலாக, கடந்த மூன்று ஆண்டுகளாக பொங்கல், தீபாவளி பண்டிகைகளின்போது, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நல்ல முறையிலும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்ள ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 2019ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது 13 ஆயிரத்து 637 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்பட்டு, 7 லட்சத்து 17 ஆயிரத்து 573 பயணிகள் பயணம் செய்தனர்.

அந்த வகையில், இந்த ஆண்டும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் கடந்த ஜனவரி 7ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்ட முடிவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ, 30 ஆயிரத்து 120 பேருந்துகள் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையிலிருந்து 16 ஆயிரத்து 75 பேருந்துகளும் பிற ஊர்களிலிருந்து 14 ஆயிரத்து 45 பேருந்துகளும் ஜனவரி 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரையில், 2 லட்சத்து 10 ஆயிரத்து 632 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். அதனடிப்படையில், அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 10 கோடியே 80 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

வினாத்தாள் வடிவமைப்பு முறை விரைவில் வெளியீடு!

14 ஆயிரத்து 492 பேருந்துகள் இயக்கப்பட்டு, 7 லட்சத்து 30 ஆயிரத்து 365 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இன்று (14.01.2020) நள்ளிரவு வரையில், ஏறத்தாழ 1,600 பேருந்துகள் இயக்கப்பட்டு, மொத்தமாக ஏறத்தாழ 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:

8 லட்சத்திற்கும் மேல் பயணம்

முன்பதிவின் மூலம் 10.80 கோடி வசூல்

சென்னை,

போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

2020- பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 

30,120 பேருந்துகள் இயக்கம் -   சென்னையிலிருந்து  16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு,  8  லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் - 

முன்பதிவு வாயிலாக 10.80 கோடி ரூபாய் வசூல் 

 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வாயிலாக, கடந்த மூன்று ஆண்டுகளாக பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நல்ல முறையிலும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்ள ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, அது நல்லவேற்பினை பெற்றுள்ளது.

    கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது 13,637 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்பட்டு, 7,17,573 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    அந்த வகையில், இந்த ஆண்டும் பொங்கல் திருநாளை முன்னிட்டு,  போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் கடந்த 7.1.2020 அன்று  சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.  இந்த கூட்ட முடிவில்  போக்குவரத்துத்துறை அமைச்சர் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ, 30,120 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சென்னையிலிருந்து 16,075 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 14,045 பேருந்துகளும் கடந்த 10.1.2020 முதல் 14.1.2020 வரையிலான 

5 நாட்களுக்கு இயக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

    அதனை தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் 

எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் கடந்த 9.1.2020 அன்று புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் 15 சிறப்பு முன்பதிவு செயலறைகளை தொடங்கி வைத்தார்கள்.  மேலும், பொதுமக்களின் வசதிக்காக பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், தாம்பரம் சானிட்டோரியம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும் மற்றும் இணையதளங்கள் மூலம் முன்திவு செய்யப்பட்டு வருகின்றன.  இப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  நாளது வரையில்  2,10,632 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.  இதன் வாயிலாக 

10 கோடியே 80 இலட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 

இப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 5 நாட்களுக்கு இயக்கப்படுகின்ற 16,075 பேருந்துகளில் 10.01.2020 முதல் 14.01.2020 மாலை 5.00 மணி வரையில் 14,492 பேருந்துகள் இயக்கப்பட்டு, 7,30,365 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.    மேலும், இன்று (14.01.2020) நள்ளிரவு வரையில், ஏறத்தாழ 1,600 பேருந்துகள் இயக்கப்பட்டு, மொத்தமாக ஏறத்தாழ 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சிறப்புப் பேருந்துகள் இயக்கத்திற்கான தற்காலிக பேருந்து நிலையங்கள்

    கடந்த 12.01.2020 முதல் 14.01.2020 வரையிலான மூன்று நாட்களுக்கு பயணிகள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு  சென்றிட ஏதுவாக, கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம், தாம்பரம் சானிட்டோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம் மற்றும் பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து தொடர்ந்து 24 மணி நேரமும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  இந்த தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் கோயம்பேட்டிலிருந்து சென்றிட ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 310 இணைப்புப் பேருந்துகள் நாள் மூழுவதும் இயக்கப்படுகின்றன.  

மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ளவும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவித்திட ஏதுவாக, 94450 14450, 94450 14436 என்ற தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள ஏதுவாக, 20 இடங்களில்  தகவல் மையங்களும்  அமைக்கப்பட்டுள்ளன.   மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.