ETV Bharat / state

1,000 வாலா போல வெடித்த டிரான்ஸ்ஃபார்மர்!

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் ஒன்றரை மணி நேரமாக டிரான்ஸ்ஃபார்மர் ஒன்று பட்டாசுகளை போல வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

பட்டாசு போல வெடித்த டிரான்ஸ்ஃபார்மர்
பட்டாசு போல வெடித்த டிரான்ஸ்ஃபார்மர்
author img

By

Published : May 21, 2020, 10:56 AM IST

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தெலுங்கு செட்டி தெருவில் நேற்று முன்தினம் (மே 19) இரவு 9 மணியளவில், திடீரென்று ஏதோ ஒன்று வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தள்ளனர். அப்போது அருகில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் ஒன்று பட்டாசு போல வெடிக்கத் தொடங்கியுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரத்தைக் கடந்தும் வெடித்துக் கொண்டே இருந்ததுள்ளது.

இதனால் அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் அச்சமடைந்து, மின்சார வாரிய அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வருவதற்குள் முன்னெச்சரிக்கையாக அந்தத் தெரு மக்களே தங்கள் வீட்டில் உள்ள மின் இணைப்பைத் துண்டித்துள்ளனர். அதன்பின் மின்சார வாரிய ஊழியர்கள் வந்த பின்பும் தீ மளமளவென பற்றி எரிந்து கொண்டிருந்ததால் ஒன்றும் செய்ய முடியாமல் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பட்டாசு போல வெடித்த டிரான்ஸ்ஃபார்மர்

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரமாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். டிரான்ஸ்ஃபார்மரில் மின்பளு அதிகமானதால் தீ ஏற்பட்டு வெடித்துள்ளது என்று கூறிய ஊழியர்கள், அதனைப் பழுது பார்த்து சரிசெய்தனர்.

இதையும் படிங்க: முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.100 அபராதம் - மதுரை மாநகராட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.