பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதிதாக ஆணையர் பொறுப்பு உருவாக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை செயலாளருக்கு அடுத்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பொறுப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஐஏஎஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதில் தற்போது பள்ளிக் கல்வி இயக்குநராக உள்ள கண்ணப்பனுக்கு பதிலாக ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டார்.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவியின் அனைத்து அதிகாரங்களும் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இயக்குனர் பதவியிடத்தில் முதன் முறையாக ஐஏஎஸ் அலுவலரான நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் இயக்குனர் அந்தஸ்தில் ஐஏஎஸ் அதிகாரிகளே இல்லாத நிலையில் தற்போது முதன் முறையாக ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக இருந்த கண்ணப்பனுக்கு வேறு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது