புரெவி புயலின் காரணமாக சில ரயில்கள் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளன. அதன் பட்டியல்கள் கீழ்காணுமாறு:
இன்று (டிச. 04) தற்காலிகமாக மாற்றம்செய்யப்பட்ட ரயில்கள்
தூத்துக்குடி-சென்னை எழும்பூர் மற்றும் தூத்துக்குடி - மைசூரு செல்லவிருந்த ரயில்கள் மதுரையிலிருந்து புறப்படும்.
ராஜதானி சிறப்பு ரயில்களின் திருத்தப்பட்ட அட்டவணை அதன் சேவை நாள்கள்
ரயில் எண் 02434, ஹஸ்ரத் நிஜாமுதீன் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் செல்லும் ராஜதானி சிறப்பு ரயில், வரும் 30ஆம் தேதிமுதல் திருத்தப்பட்ட அட்டவணையின்படி புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இயங்கும்.
ரயில் எண் 02433, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்லும் ராஜதானி சிறப்பு ரயில் திருத்தப்பட்ட கால அட்டவணையின்படி அடுத்த ஆண்டு ஜனவரி 01ஆம் தேதிமுதல் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும்.
வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில்கள்
ரயில் எண் 02611, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - புதிய ஜல்பைகுரி செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலிலிருந்து வரும் டிசம்பர் 16 காலை 10.45 மணிக்குப் புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 04.15 மணிக்கு நியூ ஜல்பைகுரியை அடைகிறது.
ரயில் எண், 02612 புதிய ஜல்பைகுரி - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வரும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் புதிய ஜல் பைகுரியிலிருந்து டிசம்பர் 18ஆம் தேதி இரவு 09.15 மணிக்குப் புறப்பட்டு மூன்றாம் நாள் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலை மாலை 14.10 மணிக்கு வந்தடையும்.
தெற்கு ரயில்வே நிலையங்களிலிருந்து அனைத்து சிறப்பு ரயில்களுக்கும் முன்பதிவு நாளை (டிச. 05) காலை 08.00 மணிக்குத் தொடங்கவுள்ளது.