ETV Bharat / state

ரயில் தாமதத்திற்கு காரணம் என்ன? - passengers using

சென்னை: ரயிலில் பயணிக்கும் பயணிகள் அடிக்கடி அவசர சங்கிலியை இழுப்பதால் ரயில்கள் தாமதம் ஆவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே
author img

By

Published : Jun 11, 2019, 5:18 PM IST

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தெற்கு ரயில்வே சார்பில் தினமும் சராசரியாக 1,305 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. அப்படி இயக்கப்படும் இந்த ரயில்களில் நாள்தோறும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கிறார்கள்.

இந்நிலையில் விரைவு ரயில்கள் குறித்த நேரத்தில் வருவதில்லை என பயணிகள் தொடர்ந்து புகார் அளித்த வண்ணம் உள்ளனர். இதற்கு காரணம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அடிக்கடி அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துகின்றனர். இதனால்தான் ரயில் தாமதமாகின்றன.

மேலும் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் இதுபோன்று 774 சம்பவங்கள் நிகழந்துள்ளன. இதற்காக பயணிகளிடம் இருந்து ரூ. 3.72 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தகுந்த காரணங்கள் இன்றி அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்தால் ஆயிரம் ரூபாய் அபராதம், ஓராண்டு சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டும், இதுபோன்ற சம்பவங்களில் பயணிகள் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் அடிக்கடி சங்கிலியை இழுப்பதால் ரெயில்கள் தாமதம் - தென்னக ரெயில்வே

தென்னக ரெயில்வேயில் தினமும் சராசரியாக 1305  விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. இது தவிர புறநகர் மின்சார ரெயில்களும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்களில் நாளொன்றுக்கு சுமார்  20 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கிறார்கள்.

விரைவு ரெயில்கள் குறித்த நேரத்தில் வருவதில்லை என்ற புகார் தொடர்ந்து இருந்து வருகிறது. பெரும்பாலான ரயில்கள் காலதாமதத்துக்கு காரணம் பயணிகள் அடிக்கடி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயில்களை நிறுத்துவதுதான் என்று தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் விரைவு ரயில்கள் கால தாமதத்துக்கு பயணிகள் சங்கிலியை அடிக்கடி இழுப்பதே முக்கிய காரணம். சக பயணிகள் ஏற முடியாதது. ரெயில் நிலையங்களில் ரெயில் நிற்கும்போது உணவு பொருட்கள் வாங்க சென்றுவிட்டு ரெயிலை தவறவிடுதல், பெட்டிகளில் தண்ணீர் இல்லை, மின்விசிறி, மின்விளக்கு எரியவில்லை போன்ற சின்ன சின்ன காரணங்களுக்காக சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்துகிறார்கள்.
கடந்த 5 மாதங்களில் மட்டும் இந்த மாதிரி சம்பவங்கள் 774 நடந்துள்ளது. இதற்காக பயணிகளிடம் இருந்து 3.72 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தகுந்த காரணங்கள் இல்லாமல் சங்கிலியை இழுத்தால் ஒரு ஆண்டு ஜெயில் அல்லது ரூ.1000 அபராதம். இரண்டும் சேர்த்தும் கூட விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் இனி அவசரக்காலத்தில் பொதுமக்கள் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த முயற்சிக்கவேண்டாம் என்றும் ரயில்வே பாதுகாப்புப்படை உதவி எண் 182 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம் என்றும் ரயில்வே கேட்டு கொண்டுள்ளது .
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.