ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களுக்கு கலாசார பயிற்சி! - புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு கலாசார பயிற்சி அளிக்கப்படுகிறது.

policy  new education policy  Training for teacher  teacher training  Training for teacher in tamil nadu based on new education policy  புதிய கல்விக் கொள்கை  ஆசிரியர்களுக்கு பயிற்சி  ஆசிரியர் பயிற்சி  புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி  சென்னை செய்திகள்
ஆசிரியர்கள் பயிற்சி
author img

By

Published : Oct 29, 2021, 11:22 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், ஆசிரியர்களுக்கு ஏழு கட்டங்களாக கலாசார பயிற்சி அளிக்கப்படுகிறது. முதற்கட்டமாக அரியலூர், சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் கலை மற்றும் கலாசார மையம் இணையவழியில் நடத்தவுள்ள இப்பயிற்சிக்கு ஆசிரியர் விபரங்களை அனுப்பிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் தொடங்கி பிப்ரவரி வரை ஏழு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் தகுதிவாய்ந்த ஆசிரியை மற்றும் ஆசிரியர் விவரங்களை அனுப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் கலாசார பயிற்சி வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.