கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 23ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதிவரை, காலை 6-10 மணிவரையும், மாலை 4-8 மணிவரையும் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும்.
அத்தியாவசிய தேவைகளுக்காக பயணம் செய்பவர்களுக்காக மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
மேலும், சென்னை கடற்கரை - வேளச்சேரிக்கு நாளை பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையில் செல்லும் மின்சார ரயில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா: தமிழ்நாடு-கர்நாடக இடையே அரசுப் பேருந்துகள் ரத்து