சென்னை: தமிழ்நாட்டில் கரோனா அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும்,தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்கள் அனைவரும் விரைவில் தடுபூசி செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள மின்சார ரயில்களில் ஜனவரி 10 முதல் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பயணிக்க அனுமதி என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இதையடுத்து, இரண்டு தவணை தடுப்பூசி போடாமல் பயணம் செய்பவர்களை கண்காணிக்க அனைத்து புறநகர் ரயில் நிலையங்களிலும் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த கண்காணிப்பில் ஜனவரி 10, 11ஆம் தேதியில் இரண்டு தவணை தடுப்பூசி போடாத 7ஆயிரத்து 762 பயணிகளை ரயில்களில் பயணம் செய்ய ரயில்வே கண்காணிப்பு குழுவினர் அனுமதிக்கவில்லை.