சென்னை: திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,’இஸ்ரேலை சேர்ந்த 3 பேர் கண்டுபிடித்த உளவு பார்க்கும் மென்பொருளை பல நாடுகளுக்கு விற்றுள்ளனர். பெகாசஸ் மென்பொருளை வாங்கிய நாட்டினர் தங்களுடைய அரசியல் எதிரிகள், நீதித்துறையினர், பத்திரிகையாளர் உள்பட சிலரை வேவு பார்க்கின்றனர்.
பெகாசஸ் விவகாரம்
இது தவறு என்று கடந்த 2 வாரங்களாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகிறோம். பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இது தேச நலனுக்கு எதிரானது.
உரிமைகள், நாட்டின் சுதந்திரம் பறிபோகிறது. தேசிய நலனுக்கு பாதுகாப்பு இல்லை. இந்திய நாட்டிற்கு வேவு செயலியை தந்திருப்பதாக சான்பிரான்சிஸ்கோவில் உறுதிச் சான்று அளித்துள்ளனர்.
இந்தியாவில் தீவிரவாதிகளை உளவு பார்த்தீர்களா? அரசியல்வாதிகளை உளவு பார்த்தீர்களா? யாரை உளவு பார்த்தீர்கள் என்பதை சொல்ல வேண்டும்.
போராட்டம் ஜனநாயத்தின் உரிமை
மேகதாது அணை கட்டுவதற்கு வாய்ப்பே கிடையாது. விரைவு திட்ட அறிக்கை அனுமதி தந்தது தவறு. காடுகள், தேசிய இயற்கை வளங்கள் பாதிக்கப்படும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துவது வாடிக்கை. நாங்கள் ஆளும்கட்சியாக இருக்கிறோம். எதிர்கட்சியினர் போராட்டம் நடத்துவது ஜனநாயகத்தில் உரிமை”என்றார்.
இதையும் படிங்க: செல்போன் ஒட்டுகேட்பு காங்கிரஸ் கலாச்சாரம் - பாஜக குற்றச்சாட்டு